கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 41 லட்சத்து 31 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 70 ஆயிரத்து 626 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸிற்கு பல அரசியல் கட்சியினரும், அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரள நிதியமைச்சர் டிஎம் தாமஸ் ஐசக் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். நிதியமைச்சருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அமைச்சரின் அலுவலக ஊழியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அதிக கடன் வாங்குங்கள்; மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யுங்கள்: ப.சிதம்பரம் அறிவுரை