இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. அந்த வழக்கை நேற்று (ஜூலை 10) விசாரித்த உச்ச நீதிமன்றம், “வெடிவைத்து விலங்குகளை கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமான செயல். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 21-இன் படி ஒவ்வொரு உயிர்களுக்கும் கண்ணியத்துடன் வாழும் உரிமையை அளிக்கப்பட வேண்டும். ஆனால் வெடிப் பொருட்களை வைத்து மிருகங்களை கொல்வது என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல்” என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-யை இன்னும் பலப்படுத்தி, மிருகங்களுக்கு எதிராக கொடூரக் குற்றங்களை செய்வோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக மத்திய அரசு, கேரளா உள்ளிட்ட 13 மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், பாலக்காடு யானை உயிரிழந்த சம்பவம் உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறியிருந்தது. அதனால் இதுபோன்ற செய்திகளை பத்திரிகைகளும், ஊடகங்களும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அரசு தரப்பிலிருந்து விளக்கம் வெளியிடப்படாதபோது, இதுபோன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...ஒடிசாவின் அரிசி கிண்ணத்தில் பயமுறுத்தும் புற்றுநோய்!