சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் ஜூன் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெ. அன்பழகன்(62) இன்று காலமானார். இதைத்தொடர்ந்து, கண்ணம்மாபேட்டையில் உள்ள மைதானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவரது இறப்பிற்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஜெ. அன்பழகன் இறப்பிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசியல்வாதி ஜெ. அன்பழகன் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். கரோனாவுடன் போராடி அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கேரள மக்கள் சார்பில் அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா