ETV Bharat / bharat

சபரிமலை விமான நிலையம்: தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகராக அமெரிக்க நிறுவனத்தை நியமித்தது சட்டமீறல் என எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்துள்ளார்.

Pinarayi Vijayan  Sabarimala airport project  Ramesh Chennithala  Kerala government  சபரிமலை விமான நிலையம்  பினராயி விஜயன்  சென்னிதாலா  சபரிமலை விமான நிலைய முறைகேடு
சபரிமலை விமான நிலையம்: தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்
author img

By

Published : Jul 29, 2020, 12:57 PM IST

Updated : Aug 17, 2020, 2:49 PM IST

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்காக இடம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே 2017ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்தை அத்திட்டத்தின் ஆலோசகராக நியமித்திருப்பதாக கேரள அரசு மீது அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா குற்றஞ்சாட்டியிருந்தார்.

"ஒரு வெளிப்படையான நடைமுறைய பின்பற்றிதான் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். இறுதி செய்யப்பட்ட பட்டியலில் மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. நிபுணர்கள், அரசு அலுவலர்களால் மதிப்பிடப்பட்டு அதிக தொழில்நுட்ப தகுதிகளின் அடிப்படையில் அமெரிக்க நிறுவனம் அத்திட்டத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.

விமான நிலையம் அமையவுள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது என அரசாங்கம் நம்புவதாக தெரிவித்த பினராயி விஜயன், ஜூன் 18 ஆம் தேதி விமான நிலையம் அமைப்பதற்காக 2ஆயிரத்து 263 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தார்.

விமான நிலையம் அமைக்க அரசு முன்மொழிந்த எறுமேலியிலுள்ள சிறுவாலி எஸ்டெட் நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று பினராயி விஜயன் கூறிவருகிறார். அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கருத்தில்லை எனத் தெரிவிக்கும் சென்னிதாலா 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அமெரிக்க நிறுவனம், அத்திட்டத்திற்கு அளித்த பங்களிப்பு என்பது வெறும் 38 பக்க அறிக்கையை சமர்பித்தது மட்டுமே எனக்கூறியுள்ளார்.

மேலும், விமான நிலையம் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடமானது தற்போது ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடத்திற்குள் நுழைய அக்குழு எதிர்ப்பு தெரிவிப்பதால் அமெரிக்க நிறுவனம் நுழையமுடியவில்லை எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: பினராயி விஜயன் பதவி விலகக்கோரி தீவிரம் காட்டும் காங்கிரஸ்!

Last Updated : Aug 17, 2020, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.