அண்மையில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்ச்சியின் பெயரில், ஏப்ரல் 21ஆம் தேதி முதல் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவிற்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இப்படி அங்கு எரியத் தொடங்கிய இந்த பர்தா தடை நெருப்பானது, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தின் மூலம், மேலும் பற்றவைக்கப்பட்டது. 'ராவணன் நாடான இலங்கையில் பர்தா தடை செய்யப்பட்டுள்ளது, ராமன் நாடான இந்தியாவில் ஏன் தடை செய்யக்கூடாது?' என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த தலையங்கம் வெளியான மறு நாளான இன்று அதன் எதிரொலியாக, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய கல்வி சமூகம், கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை விதிப்பதாக ஒரு சுற்றிக்கையை வெளியிட்டுள்ளது, இது இஸ்லாமிய பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.