கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்தின் வியாழக்கிழமை (ஜூன்25) செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேரள புலம்பெயர் தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதில், விஜயன் தனது முடிவை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.
முதலில் ஒரு விஷயத்தை சொல்கிறார். பின்னர் அவரே அதனை மாற்றுகிறார். இதையடுத்து வேறொரு திட்டத்தை கொண்டுவருகிறார். இறுதியாக அந்தத் திட்டத்தை திரும்ப பெறுகிறார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசுக்கும் சில பங்குகள் உள்ளன. ஆனால் விஜயன் மத்திய அரசை தொடர்புகொள்ள தவறிவிட்டார்.
முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் அனைவரையும் விஜயன் வரவேற்றார். அதன் பின்னர் கோவிட்-19 பாதிப்பு அல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றார்.
தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முழு பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், விமான நிலையத்துக்கு வந்தவுடன் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய திட்டத்தோடு வந்துள்ளார்” என்று விமர்சித்தார்.