ETV Bharat / bharat

கேரளாவிற்கு மீண்டும் ரெட் அலர்ட்!

கேரளாவில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

kerala
author img

By

Published : Jul 18, 2019, 1:01 PM IST

Updated : Jul 18, 2019, 1:14 PM IST

கேரளாவில் கடந்த வருடம் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மாநிலமே முற்றிலும் பாதிப்புக்குள்ளானது. இதனால் பலரது வீடுகள், உடமைகள் உள்ளிட்டவை நீரில் அடித்து செல்லப்பட்டன. நீரில் மூழ்கி கேரளா மீண்டு வருமா என்பது கேள்விகுறியாக இருந்த நிலையில், மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில் இன்று தொடங்கி 20ஆம் தேதி வரை கேரளாவிற்கு ரெட் அலர்ட் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாவட்டங்களிலும் 20செ.மீ. மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

ரெட் அலர்ட்
ரெட் அலர்ட்

கடந்த வருடம் பெய்த மழையினால் கடவுளின் தேசம் முற்றிலும் பாதிக்கப்பட்டது, தற்போது அதேபோல் நேராமல் இருப்பதற்கு மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறந்து வைக்கும்படி அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வடமாநிலமான பிகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலத்தில் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கேரளாவிற்கும் அந்த பாதிப்பு வரக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையான தமிழ்நாட்டிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 18, 2019, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.