கேப்டன் அமோல் உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் சோதனை விமானத்தை உருவாக்கினார். இந்தத் திட்டத்தை அவர் 2016ஆம் ஆண்டே நிறைவேற்றினார். தொடர்ந்து பல சோதனை முயற்சிகள் நடந்தன. தற்போது அந்த விமானம் 6 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்டன் அமோலை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு வெறும் பாராட்டு மட்டும் தெரிவிக்கவில்லை; பெரிதாக கனவு காணுங்கள் என்றும் வாழ்த்தினார். கேப்டன் அமோல் ஒரு தொழில்முறை விமானி ஆவார். இந்தியாவில் சிறிய ரக விமானங்களை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் கனவு. இதற்காகத் தொடர்ந்து முயற்சித்த அமோல், தற்போது சாதித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய கனவு பூர்த்தியான ஒரு மகிழ்ச்சி எனக்குத் தோன்றுகிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வேலைக்காக நான் பல தரவுகள், தகவல்களை சேகரித்தேன். அவைகள் எனது விமானத்தை கட்டமைக்க உதவின. அந்தத் தகவல்களை நான் பாதுகாத்துவருகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: #AirForceDay விமானப்படை தின ஒத்திகை; வானில் வணக்கம் செய்த விமானம்!