தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (டி.எஸ்.ஆர்.டி.சி) தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை இன்று பணியில் சேருமாறு கேட்டுக்கொண்டார்.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், டி.எஸ்.ஆர்.டி.சி-யின் ஆபத்தான நிதி நிலையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார் அதில்.
- ஊழியர்கள் பணியில் சேர எந்த நிபந்தனையும் இருக்காது.
- அரசு நிதி உதவியாக ரூ. 100 கோடியை உடனடியாக ஒப்புதல் செய்யப்படும்.
- அடுத்த திங்கட்கிழமை முதல் பேருந்து கட்டணத்தை ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 20 பைசா உயர்த்த டி.எஸ்.ஆர்.டி.சிக்கு அரசு அனுமதிக்கிறது.
- வேலை நிறுத்த காலத்தில் இறந்த ஊழியர்களின் குடுபத்தில் ஒருவருக்கு அரசாங்கம் வேலை வழங்கப்படும்.
- பணியாளர் நல கலந்தாய்வுகளை அரசு தொடங்க உள்ளது.
டி.எஸ்.ஆர்.டி.சியை அரசாங்கத்துடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் வேண்டுகோளை மதித்து 48,000 ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
தெலங்கானா மாநிலத்தின் டி.எஸ்.ஆர்.டி.சி வரலாற்றில் மிக நீண்ட வேலைநிறுத்தத்தில் ஐந்து ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர், மேலும் சிலர் மன அழுத்தத்தால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பெண் டாக்டர் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை - முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்! #RIPPriyankaReddy