அதிமுக கொள்கை விதிகளின்படி செயல்படாமல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பதவிகளை உருவாக்கியதற்கு எதிராகவும், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட தடை விதிக்க கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த வழக்கை, கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்போது, இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க எந்த அவசியமும் இல்லை எனக்கூறி கே.சி.பழனிசாமியின் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.