அசாம் மாநிலத்தில் மிகவும் பிரபலமான காசிரங்கா தேசியப் பூங்கா, கரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பூங்காவை கரோனா விதிமுறைகளுடன் திறப்பதற்கான வழிகளை பூங்கா நிர்வாகிகள் மேற்கொண்டனர். இந்தப் பூங்காவில் கடந்த ஆண்டு கோடிக்கணக்கான மக்கள் பார்வையிட்டதன் மூலம் சுமார் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளனர்.
கரோனாவால் பெரும் வருவாயை அசாம் மாநில சுற்றுலாத் துறை இழந்துள்ளதால், அக்டோபர் 5ஆம் தேதியே பூங்கா திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதிர்பாராத விதமாக பெய்த கனமழையின் காரணமாக, பூங்கா திறக்கும் நிகழ்வு அக்டோபர் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும், பூங்கா திறப்பு நாளான அக்டோபர் 21இல் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லா வைத்யா இருவரும் உலகப் புகழ்பெற்ற ஆசிய காண்டாமிருக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.