பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வழித்தடம் நவம்பர் 9ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
![கர்தார்பூர் வழித்தடம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/eia4t4fw4aauo1a_0311newsroom_1572780452_190.jpg)
கர்தார்பூர் திறப்பு விழாவை முன்னிட்டு பாகிஸ்தானுக்கு செல்லவிருக்கும் இந்தியர்களின் பட்டியலை இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக தகவல் வெளியானது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "சீக்கியர்களை கர்தார்பூர் அன்புடன் வரவேற்கிறது. திறப்பு விழாவை முன்னிட்டு கட்டுமான பணிகளை விரைந்து முடித்த நம் அரசை பாராட்டுகிறேன்" என்றார்.
![குருத்வாரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/eia4topwkaasira_0311newsroom_1572780452_1028.jpg)
முன்னதாக, விசா, சேவை கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியிருந்தது. திறப்பு விழாவின்போது இஸ்லாமாபாத்தில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் இம்ரானுக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அவர் செயல்படுவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த மவுலானா ஃபஸ்லூர் ரேஹ்மான் தலைமையில் அன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
![குருத்வாரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/eia4rb5wwaelh-q_0311newsroom_1572780452_677.jpg)
இதையும் படிங்க: இந்தியாவின் புதிய வரைபடத்தை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்