ராமாயணத்தில் சீதையை மணமுடிக்க சுயவரம் நடைபெற்றது. இதில், வில்லை உடைப்பவரே சீதையை மணக்க முடியும். இந்நிலையில், இந்நிகழ்வில் கலந்துகொண்ட எவராலும் வில்லை அசைக்கக் கூட முடியவில்லை. இதில் கலந்துகொண்ட ராமர் வில்லை இலகுவாக தூக்கியது மட்டுமல்ல அதனை உடைத்து சபையோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், சீதையின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார். இதையடுத்து, இருவருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.
இதேபோல், கா்நாடகா மாநிலம் கோகர்னாவில் வசித்துவரும் நிஷா என்ற பெண் தனக்கு வரும் வாழ்க்கைத் துணையை சுயம்வரம் முறையில் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த சுயம்வரம் நிகழ்ச்சிக்கு பலர் வருகை புரிந்த நிலையில் ராமதாஸ் கம்மத் வில்லை உடைத்தார். இதனையடுத்து நிஷாவின் குடும்பத்தார் நிஷாவை ராமதாஸுக்கே திருமணம் செய்துவைத்துள்ளனர்.
ராமாயணத்தில் நடைபெற்ற சுயம்வரம் போன்றே இதுவும் நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் உற்சாகத்துடன் அந்த நிகழ்வை கண்டுகளித்தனர்.