காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களின் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் தகுதி நீக்கம் செய்து, 2023ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடைவிதித்தார். 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது.
பின்னர், எடியூரப்பா முதலமைச்சரானார். இந்நிலையில், காலியான 15 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடைவிதித்த சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்க கர்நாடக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.