பிரதமர் நரேந்திர மோடி 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். பணமதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக நாட்டில் பண புழக்கம் பெருமளவு குறைந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், ஜனார்தன் ரெட்டி தன் இல்லத் திலருமணத்தை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தினார். அச்சமயத்தில் இது பெரும் பரப்பரப்பானது.
இந்நிலையில், தற்போது கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான பி ஸ்ரீராமுலுவின் மகள் திருமணம் ரூ. 500 கோடி செலவில் மிக பிரம்மாண்டமான முறையில் ஐந்து நாள்கள் நடைபெறவுள்ளது.
மார்ச் 1ஆம் தேதி முதல் பல்வேறு திருமண சடங்குகள் நடைபெற்றுவருகிறன. இதற்காக பெங்களூருவிலுள்ள அரண்மனை மைதானத்தில் பிரம்மான்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் ஐந்து நாள்கள் இந்த திருமண கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதி நாளான மார்ச் 5ஆம் தேதி திருமணம் நடைபெறும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஸ்ரீராமுலு கூறுகையில், "என்னால் உங்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க முடியவில்லை. ஊடகத்தின் மூலம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். அரண்மனை மைதானத்தில் மார்ச் ஐந்தாம் தேதி நடைபெறும் திருமணத்தில் அனைவரும் கலந்துகொள்ளுங்கள்" என்றார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழங்குடிகள் வாழ்வில் மாற்றம் தந்த ‘மால்வாவின் அன்னை தெரசா’