தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர், தமிழ் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இதைத்தொடர்ந்து நித்யானந்தா மீது மேலும் சில பாலியல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் 2010ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை (ஜாமீன்) வழங்கியது.
இந்த நீதிமன்ற பிணையை ரத்து செய்யக் கோரி குருப்பன் லெனின் என்பவர் பெங்களுரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா, நித்யானந்தாவின் நீதிமன்ற பிணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
குருப்பன் லெனின், நித்யானந்தாவின் கார் ஓட்டுனராக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. அவர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவுக்கு எதிராக அளித்த மனுவில், “நித்யானந்தா மீது குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல் நிலையத்திலும் கடத்தல், பாலியல் உள்ளிட்ட புகார்கள் உள்ளது.
அவர் தனது மீதான விசாரணையை தவிர்க்க புதிது புதிதாக பேசிவருகிறார்” என்று கூறியிருந்தார்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கடந்தாண்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
அவர், ஈகுவடார் நாட்டின் அருகில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அங்கு 'கைலாசம்' என்ற இந்து தேசத்தை உருவாக்கி விட்டார் என்றும் அந்த தகவல்கள் நீள்கின்றன.
இதற்கிடையில் நித்யானந்தாவை கண்டறிய சர்வதேச காவலர்கள், நீல (ப்ளு) கார்னர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை