பெங்களூரு உள்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் சமீபகாலமாக கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. சில நாள்கள் முன்பு வரை தமிழ்நாடு மற்றும் டெல்லியில் இருந்து வருவோருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வருவதைப் போலவே, நிறுவன தனிமைப்படுத்துதல் (Institutional quarantine) என்பது கட்டாயமாக இருந்தது.
ஆனால் கர்நாடக அரசு இந்த முடிவை தற்போது மாற்றி உள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் உள்பட பிறமாநிலத்தில் இருந்து வருபவர்கள் 14 நாள்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இதுவரை 23 ஆயிரத்து 474 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 13 ஆயிரத்து 251 வழக்குகள் செயலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாய்கள் மூலம் கரோனாவா? அச்சத்தில் மக்கள்