குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூருவில் டிச.19ஆம் தேதி போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை 6 மணி வரை இந்த உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
எனினும் காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக 5,000 பேர் திரண்டு போராட்டம்!