கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 110 பேர் வாக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இன்று வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவருகின்றனர்.
அக்குடும்பத்தின் தலைவர் லட்சுமி ராம் கூறும்போது, “நாங்கள் ஒவ்வொரு முறையும் ஒன்றாக வந்து வாக்களிப்போம். சமூகத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறோம். அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
சிக்பளாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சுதாகர், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் அஞ்சனப்பா ஆகியோர் களம் கண்டுள்ளனர். பாஜக சார்பில் களம் காணும் சுதாகர் ஏற்கெனவே மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி பாஜகவின் எடியூரப்பா ஆட்சிக்கு வந்தார். முன்னதாக அப்போதைய அரசுக்கு எதிராக செயல்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிகளில் முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது.
இதையும் படிங்க: தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ரெய்டு.!