இதுகுறித்து கர்நாடக சபாநாயகர் விஷ்வேஷ்வர் ஹெக்டே பேசுகையில், கர்நாடக சட்டப்பேரவை நிகழ்வுகளை பதிவுசெய்ய செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி சட்டப்பேரவை நிகழ்வுகளை சட்டப்பேரவை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இனி கேமராக்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது என்றார்.
1994ஆம் ஆண்டு முதல் கர்நாடக சட்டப்பேரவை நிகழ்வுகளை பதிவு செய்ய செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதனால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் நேரடியாக மக்களுக்கு தெரிய வந்தது.
கடந்த 2012ஆம் ஆண்டு கர்நாடகா, பாஜக ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்வுகளின்போது அடல்ட் திரைப்படங்களை பார்த்த எம்.எல்.ஏ.க்கள் சிக்கினர். அந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ’பாரத் மாதா கி ஜே’ என்று கூறாத இந்தியர்கள் ’பாகிஸ்தானியர்கள்’ - பாஜக வேட்பாளர்