புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பக்ருதீன் காரைக்காலிலிருந்து மூன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நல்லம்பல் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது திருநள்ளாறு செரக்குடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சென்றபோது, ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவ்வழியே சைக்கிளில் சென்றவர் தலையில் பலத்த காயமும், ஆட்டோவில் பயணித்த மூன்று பேருக்கு படுகாயமும் அடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் நால்வரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காரைக்கால் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து நடைபெறும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க...தெலங்கானாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்