ETV Bharat / bharat

'குடிபெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலைக்கு நீதித்துறை விடை தேட வேண்டும்' - கபில் சிபல் - 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டம்

ஊரடங்கில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து கவனித்து நீதித்துறை விடை தேட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

கபில் சிபல்
கபில் சிபல்
author img

By

Published : May 18, 2020, 10:07 AM IST

நீதித்துறை, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வரும் துயரங்கள், அவர்களின் அவல நிலை குறித்து கவனித்து, அவற்றுக்கு விடை தேட வேண்டும் என காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், அவுரல்யா மாவட்டத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்திலும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புகையில் ஏற்பட்ட கோர விபத்துகள் குறித்து பேசியுள்ள கபில் சிபல், ”தங்கள் சொந்த ஊர் திரும்ப நாடு முழுவதும் காத்திருக்கும் 20 லட்சம் தொழிலாளர்களால் இனியும் காத்திருக்க முடியாது. போதிய பணம் இல்லாமல் தவித்துவரும் இவர்கள் தினந்தினம் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

  • 2million migrants stranded
    Desperate to reach home
    Can’t wait any more
    No money left to survive

    Every day they die :

    Accident (26) yesterday
    16 run over by a train
    Children before reaching home

    When will courts wake up and ask for answers !

    — Kapil Sibal (@KapilSibal) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நேற்று 26 பேர், அதற்கு முன் 16 பேர் என இவர்கள் வீடு போய் சேராமலேயே உயிரிழக்கின்றனர். நீதிமன்றம் விழித்து என்றைக்கு இதுகுறித்து கேள்வி கேட்கும்” என வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டெழ 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொருளாதார தொகுப்பு குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். இந்த மொத்த தொகுப்பில் அரசாங்கத்தின் பணப்பரிமாற்றத் தொகை மொத்தம் நான்கு லட்சம் கோடி ரூபாய் மட்டுமே எனவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய எல்லைக்குள் தொடர்ந்து ஊடுருவும் சீனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.