ETV Bharat / bharat

கான்பூர் என்கவுன்டர்: துபேவின் பைனான்சியர் கைது - விகாஸ் துபே

லக்னோ: கான்பூர் என்கவுன்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளி விகாஸ் துபே தேடப்பட்டுவந்த நிலையில், அவரின் பைனான்சியர் ஜெய் பாஜ்பாய் சிறப்பு காவல் படையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கான்பூர் என்கவுன்டர்
கான்பூர் என்கவுன்டர்
author img

By

Published : Jul 7, 2020, 5:13 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்யச் சென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, துபேவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பைனான்சியர் ஜெய் பாஜ்பாயை சிறப்பு காவல் படை கைதுசெய்துள்ளது. பாஜ்பாய், துபே ஆகியோருக்கிடையே 15 லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, பைனான்சியரின் மனைவி, தாய் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் அனந்த் தேவுடன் துபே எடுத்த புகைப்படங்கள்
முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் அனந்த் தேவுடன் துபே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

பாஜ்பாயின் பதிவு எண் இல்லாத காரைத் தான் விகாஸ் துபே பயன்படுத்திவந்தார். இந்தக் கார்களைப் பயன்படுத்தித்தான் துபே தப்பித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் அனந்த் தேவுடன் துபே எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேவ் விரைவில் விசாரிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

துபேவின் வணிகத்தை பாஜ்பாய்தான் செய்துவருவதாகவும், அவருக்குச் சொந்தமாக 15 வீடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. துபாயில் 15 கோடி ரூபாய் மதிப்பில் பாஜ்பாய்க்குச் சொந்தமாக ஒரு வீடும், லக்னோவில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சர்வதேச நிதி சேவை ஆணையத்தின் முதல் தலைவராக இன்ஜெதி சீனிவாஸ் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.