உத்தரப் பிரதேசத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் திக்ரு கிராமத்தில் விகாஷ் துபே என்பவர் வசித்துவருகிறார். உள்ளூர் தாதாவான இவர் மீது 60க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளில் இவரை கைது செய்ய காவலர்கள் ஜூலை 2-3ஆம் தேதி நள்ளிரவில் அங்கு சென்றனர்.
துபேவின் இருப்பிடத்தை காவலர்கள் நெருங்கியதும், அங்கு மறைந்திருந்த ரவுடிகள் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சில காவலர்கள் காயமுற்றனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. மாநிலத்தின் முக்கிய காவல் உயர் அலுவலர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இது குறித்து கான்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) கூறுகையில், “சம்பவ பகுதியில் தீவிர சோதனை நடத்திவருகிறோம். தடயவியல் நிபுணர்களும் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: மதுக்கடை, தகராறில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை!