ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறைத் தாக்குதலில் காயமடைந்த அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவி அயிஷ் கோஷை, மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தீபிகா படுகோனை சமூக வலைதளங்களில் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் இந்திப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால், தீபிகாவை விமர்சிக்கும் நபர்கள், என்னை அவரது படங்களைப் பார்க்கத் தூண்டுகிறார்கள்" என்றார்.
முன்னதாக, ஜே.என்.யூ. பல்கலைக்கழக வன்முறைக்கு எதிராக மாணவரகள் மேற்கொண்ட போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை தீபிகா படுகோன் அவர்களுடன் நேற்றிரவு போராட்டத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீபிகா படுகோன் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும், அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் சப்பாக் திரைப்படத்தைப் புறக்கணிக்கவும் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்