ETV Bharat / bharat

'கமலேஷ் திவாரியை சுட்டுக்கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்!' - உ.பி. டிஜிபி தகவல் - Uttar Pradesh DGP, OP Singh

லக்னோ: இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரியை சுட்டுக்கொலை செய்த மூன்று நபர்கள் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையைச் (ஏடிஎஸ்) சேர்ந்தவர்கள் என அம்மாநில காவல் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

Kamlesh tiwari arrest update, கமலேஷ் திவாரியை கொலை செய்த ஏ.டி.எஸ் படை
author img

By

Published : Oct 19, 2019, 4:26 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு அகில பாரத இந்து மகாசபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. மேலும், காவல் துறையினர் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டதில் கமலேஷ் திவாரிக்கு பழக்கமுள்ளவர்களே இதனைச் செய்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.

Kamlesh tiwari arrest update, கமலேஷ் திவாரியை கொலை செய்த ஏ.டி.எஸ். படை

இந்நிலையில், இன்று காலை அவரை கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கமலேஷ் திவாரியை சுட்டுக்கொன்ற மூன்று நபர்கள் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையைச் (ஏடிஎஸ்) சேர்ந்தவர்கள் எனவும் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் இக்கொலையை செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதனை செய்தியாளர்களுக்கு தெரிவித்த உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஓ.பி. சிங், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கமலேஷ் திவாரியை கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

Intro:Body:

Kamlesh tiwari arrest update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.