கர்நாடக மாநிலம் கம்பாலா மாவட்டத்தில் ஆண்டு தோறும் 'கம்பாலா பந்தயம்' எனும் எருது விடும் போட்டி நடைபெறுவது வழக்கம். இதில் உடுப்பி, தட்சிணா கன்னட, காசரகோடு (கேரளா) மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டுக்கான கம்பாலா பந்தயம் கடந்த ஜன.30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், 43 பதக்கங்களை வென்று 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து சாதனை படைத்த கம்பாலா உசேன் போல்ட் என்று அழைக்கப்படும் சீனிவாச கவுடா கலந்து கொண்டார்.
இந்நிலையில், சீனிவாசா கவுடா பந்தயத்தின் போது நெல்வயலில் கால் சறுக்கி கீழே வீழுந்தார். இதனால், பந்தய தூரத்தை அவர் அடையவில்லை. இதனிடையே, பக்கவாட்டுப் பகுதியில் மின்னல் வேகத்தில் வந்த மற்றோரு வீரர் தூரத்தை கடந்து போட்டியில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, படுகாயமடைந்த சீனிவாசா கவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர் பிப். 06 ஆம் தேதி நடைபெறவுள்ள பந்தயத்தில் கலந்து கொள்வார் எனக் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் பார்முலா 4 கார் பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்