ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 230 தொகுதிகள் அடங்கிய மத்தியப் பிரதேசத்தில், பெரும்பான்மையைக் கைப்பற்ற முடியாமல் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
ஆனால் காங்கிரசின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தன்வசம் இழுத்துக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பாஜக சதித்திட்டம் தீட்டுவதாகக் காங்கிரஸ் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே முதலமைச்சர் கமல்நாத் நேற்று டெல்லி சென்றார். அங்கு அக்கட்சியின் மூத்தத் தலைவர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலங்களவைத் தேர்தலுக்கு கட்சி சார்பாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கவும் இந்த டெல்லி பயணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாநிலங்களவையில் மூன்று இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
இதையும் படிங்க... 'பாஜகவுக்கு இதே வேலையாப் போச்சு' காங்கிரஸ் மூத்தத் தலைவர் தாக்கு!