உலகின் மிகப்பெரிய பாசனத் திட்டமாக கருதப்படும் காலேஷ்வரம் பாசனத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2016 ஆண்டு தொடங்கப்பட்டது. தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கனவுத் திட்டமாக இந்த காலேஷ்வரம் திட்டம் அறியப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கு 10 டிஎம்சியும், ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களுக்கு 30 டிஎம்சியும், தொழிற்சாலைகளுக்கு 16 டிஎம்சியும் தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரத்து 832 கிலோமீட்டர் நீளமும் 240 டிஎம்சி கொள்ளளவுள்ள நீர்தேக்கங்களையும் கொண்ட இத்திட்டம், மாபொரும் பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் சுமார் 13 மாவட்டங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்கப்படுகிறது.
இத்திட்டத்தின் தொடக்க விழாவில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ்(கே.சி.ஆர்), ஆந்திரா முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஆளுநர் நரசிம்மன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.