ETV Bharat / bharat

ட்விட்டர் பக்கத்தில் காங்கிரசைக் கழற்றிவிட்ட சிந்தியா, விழுகிறதா அடுத்த விக்கெட்? - ஜோதிராதித்தய சிந்தியா காங்கிரஸ் மத்திய பிரதேசம்

போபால்: மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகக் கருதப்படும் ஜோதிராதித்தய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தின் சுயகுறிப்பிலிருந்து காங்கிரசை நீக்கியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

scindia
author img

By

Published : Nov 25, 2019, 2:41 PM IST

Updated : Nov 25, 2019, 10:13 PM IST

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. அம்மாநில முதலமைச்சராக மூத்த தலைவர் கமல்நாத் பதவி வகித்துவரும் நிலையில், அம்மாநிலத்தின் இளைஞர் முகமாக ஜோதிராத்தியா சிந்தியா உருவெடுத்துவருகிறார். இவரின் வளர்ச்சி காரணமாக கமல்நாத்திற்கும் அவருக்கும் நெருடல் ஏற்பட்டுள்ளதாக சில மாதங்களாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த சிக்கலைக் காங்கிரஸ் மேலிடம் கண்டும் காணாமல் இருந்துவருவதால் சிந்தியா கடும் அதிருப்தியில் உள்ளதாகச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதன் அதிரடி திருப்பமாக இன்று ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய மாற்றம் செய்துள்ளார். ட்விட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள தனது சுயக்குறிப்பில் காங்கிரஸ் கட்சியின் பெயரைத் தூக்கிவிட்டு, 'கிரிக்கெட் ஆர்வலர், பொது சேவகர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தியாவின் மாற்றப்பட்ட ட்விட்டர் பக்கம்

அதிருப்தியில் இருக்கும் சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜோதிராதித்ய சிந்தியா தொடர்பில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் மறுசுழற்சியில் செங்கல்! பிரமிப்பை ஏற்படுத்தும் பயன்கள்!

Intro:Body:

Jyotiraditya Scindia to ANI, on no mention of Congress party in his Twitter bio: A month back I had changed my bio on Twitter. On people's advice I had made my bio shorter. Rumours regarding this are baseless.

Conclusion:
Last Updated : Nov 25, 2019, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.