டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே மாபெரும் வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து கட்சியின் பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தேர்தல் முடிவுகள் வருத்தத்தைத் தருகிறது.
கட்சியின் கொள்கையிலும் செயல்பாடுகளிலும் மாற்றம் வேண்டும். நாடு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. எனவே, புது விதமாக சிந்திக்க வேண்டும். நாட்டு மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது!