அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, சிபிஐ சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் இவ்வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 30ஆம் தேதி வழங்கவுள்ளார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் தீரப்பு தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் துணை பிரதமரான அத்வானி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரும் தீர்ப்பன்று நேரில் ஆஜராக வேண்டும்.
இந்த வழக்கின் வாதம் தொடர்பாக 400 பக்க அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் அவருக்கு பதவி நீட்டிப்பை வழங்கியது.
இதையும் படிங்க: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயம்