புதுச்சேரி சட்டபணிகள் ஆணையம் சார்பில் டிசம்பர் 14ம் தேதி(இன்று) ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாலை போக்குவரத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
இதுகுறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயலரும் நீதிபதியுமான ஷாபனா தேவி, மாவட்ட தலைமை நீதிபதி தனபால் ஆகியோர் புதுச்சேரி, கடலூர் சாலையில் நீதிமன்றத்தின் அருகிலும் பேருந்துகளிலும் பொது மக்களுக்கு விநியோகித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பலன்பெற கேட்டுக் கொண்டனர் .
இதையும் படிங்க: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் பிணை வழங்கிய நீதிமன்றம்!