டெல்லியில் வெளியாகும் உள்ளூர் செய்தித் தாள் நிறுவனம் மற்றும் செய்தி இணையதளத்தின் உரிமையாளர் விஜய் சுக்லா (39). இவர் வைஷ்ணோ தேவி யாத்ரா குறித்து ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார். அதனையடுத்து பாஜக எம்எல்ஏ உமேஷ் அகர்வாலை சந்தித்து அந்த செய்தியை வெளியிடாமல் இருக்க ரூ. 3 கோடி தருமாறு மிரட்டியுள்ளார்.
பின்னர் ஜூலை 11ஆம் தேதி அன்று மீண்டும் எம்எல்ஏவை சந்தித்த சுக்லா, ரூ.1.85 கோடி மட்டும் தரக்கூறி பேரம் பேசியுள்ளார். மேலும், கேட்ட தொகையை தரவில்லையென்றால் ஜூலை 20ஆம் தேதியன்று உங்களைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்டுவிடுவேன் என எம்எல்ஏ அகர்வாலை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏ உமேஷ் அகர்வால், பத்திரிகையாளர் மிரட்டியது குறித்து காவல் துறையினரிடம் புகாரளித்தார். பின்னர் காவல் துறையினர் விஜய் சுக்லாவை கைது செய்து, நான்கு நாட்கள் ரிமாண்ட் செய்துள்ளனர்.