ETV Bharat / bharat

துணைவேந்தர் மனைவியை சிறைப்பிடித்த மாணவர்கள் - துணைவேந்தர் மனைவி

டெல்லி: மாணவர்கள் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைகழக துணைவேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Mar 26, 2019, 11:23 AM IST

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் கடந்த எட்டு நாட்களாக மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பல்கலைகழகம் மற்றும் துணைவேந்தர் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் துணைவேந்தர் இல்லத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணிநேரம் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டம் நடந்த சமயத்தில் துணைவேந்தர் வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அவரையும் போராட்டகாரர்கள் வெளியில் விடாமல் வீட்டிற்குள்ளேயே சிறை வைத்துள்ளனர். இதையடுத்து அவர் கணவரான துணைவேந்தருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த துணைவேந்தர் மமிடாலா ஜெகதீஷ்குமார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பல்கலைகழகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் எனது வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் இரண்டு மணி நேரம் எனது மனைவியை வெளியில் விடாமல் சிறைப்பிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் எனது வீட்டில் பாதுகாப்பில் இருந்த காவலாளிகளையும் தாக்கியதோடு வீட்டின் ஜன்னல், கதவு உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். நான் அலுவல் பணி விஷயமாக வெளியில் சென்று விட்டேன். எனது மனைவி மட்டும் வீட்டில் இருந்த போது, அத்துமீறி போராட்டம் நடத்தியதோடு, குற்றவாளி போன்று எனது மனைவியை சிறைப்பிடித்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு பின்னால் நக்சல்களின் துண்டுதல் உள்ளது என்றும், சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.