ETV Bharat / bharat

சாவர்க்கருக்கும் அவரது கைக்கூலிகளுக்கும் ஒருபோதும் இங்கே இடமில்லை - மாணவர் சங்கம் காட்டம்!

டெல்லி : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள சாலை ஒன்றிற்கு இந்துத்துவ தலைவர் சாவர்க்கரின் பெயரை வைத்ததை 'ஜே.என்.யூ.வின் மரபுக்கு ஏற்பட்டுள்ள அவமானம்' என ஜே.என்.யூ. மாணவர் சங்கம் விமர்சித்துள்ளது.

JNU road named after Savarkar, JNUSU sees red
சாவர்க்கருக்கும் அவரது கைக்கூலிகளுக்கும் ஒருபோதும் இங்கே இடமில்லை - மாணவர் சங்கம் காட்டம்!
author img

By

Published : Mar 16, 2020, 11:34 AM IST

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுபன்சிர் விடுதிக்குச் செல்லும் சாலைக்கு சாவர்க்கரின் பெயரை பல்கலைக்கழக நிர்வாகம் சூட்டியுள்ளது. நிர்வாகத்தின் இந்தச் செயலை இடதுசாரி மாணவத் தலைமையின் கீழ் இயங்கிவரும் ஜே.என்.யூ. மாணவர் சங்கம் இந்த நடவடிக்கையை 'ஜே.என்.யூ.வின் மரபுக்கு ஏற்பட்டுள்ள அவமானம்' என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் வாட்ஸ்அப்பில் கருத்து தெரிவித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ், "இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்த மனிதனின் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு ஜே.என்.யூ.வின் மரபுக்கு வெட்கக் கேடாக அமைந்திருக்கிறது. பல்கலைக்கழகத்திற்குள் சாவர்க்கருக்கும் அவரது கைக்கூலிகளுக்கும் ஒருபோதும் இங்கே இடம் இல்லை, ஒருபோதும் இடம் இருக்காது #RejectHindutva" என்று கூறிள்ளார்.

JNU road named after Savarkar, JNUSU sees red
ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகச் சாலைக்கு சாவர்க்கரின் பெயர் வைத்துள்ளதைக் காட்டும் பலகை

கடந்தாண்டு ஆகஸ்டில், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்கு முன்னதாக அதன் மாணவத் தலைவர் சக்தி சிங், டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக கலை பீடத்தின் வாயிலுக்கு வெளியே பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி வீர சாவர்க்கருக்கு மார்பளவு சிலை ஒன்றை நிறுவினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ்

இதனைப் பல்வேறு மாணவர் பிரிவுகளும் ஒருங்கிணைந்து எதிர்த்தன. காங்கிரசின் மாணவர் பிரிவான என்.எஸ்.யூ.ஐ. சாவர்க்கரின் சிலைக்கு கறுப்பு மைப்பூசியதைத் தொடர்ந்து அந்தச் சிலை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க : நமஸ்தேக்கு 'யெஸ்' கை குலுக்‌குவதற்கு 'நோ' - விழிப்புணர்வு மணல் கைவண்ணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.