ETV Bharat / bharat

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்காக பேருந்து சேவை - ஜார்க்கண்ட் அரசு - செப்டம்பர் 30ஆம் தேதிவரைபொது போக்குவரத்து

ராஞ்சி : வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜேஇஇ, நீட் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு ஜார்க்கண்ட் அரசு, செப்டம்பர் 30ஆம் தேதிவரை பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

jkhand-allows-public-transport-within-state-hotels-lodges-to-reopen-in-view-of-jee-slash-neet-exams

author img

By

Published : Aug 29, 2020, 7:39 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் தலைமைச் செயலர் சுக்தேவ் சிங் பிறப்பித்துள்ள உத்தரவின் படி, ”கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாநிலத்தில் பார், கல்வி நிறுவனங்கள், சினிமா, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வு, கலையரங்கங்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தியோகரில் பாபா பைத்யநாத் தாம், தும்காவில் உள்ள பசுகிநாத் கோயில் தவிர அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீட், ஜேஇஇ தேர்வுகளில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மாணவர்களும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதற்காக அவர்கள் தனியாக அனுமதி பெறத் தேவையில்லை.

நீட், ஜேஇஇ தேர்வுகளின்போது, ​​பிற மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு 14 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் அரசாங்கம் ஹோட்டல்கள், லாட்ஜ்கள், உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளதுடன், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜேஇஇ, நீட் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு, மாநிலத்திற்குள் பொதுப் போக்குவரத்திற்கும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.