ரணிந்தர் சிங்கின் விண்ணப்பத்தை கருத்தில்கொண்டு, அவரை நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதையும், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் அறக்கட்டளை உருவாக்கியதையும் விளக்குவதற்காக அக்டோபர் 23ஆம் தேதியன்று ஜலந்தர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக முன்னதாக அமலாக்கத் துறை அழைத்திருந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இந்த வார தொடக்கத்தில் மாநில விவசாயிகளை சமாதானப்படுத்தும் முயற்சியாக, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்நிலையில், அவரது மகனை அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக அழைத்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.