ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய நிலைகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியிலிருந்து பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்திவருகின்றன. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கிராமவாசி பெர்வேஸ் அகமது என்பவர் கூறும்போது, ”தற்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது. எங்களுக்கு உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதலால் பொதுமக்கள் தங்களின் வாழ்க்கையை இழக்கின்றனர். எனது வீடு இடிந்து விழுந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் எனது கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, சில முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி போய்விட்டன” என்றார்.
பாகிஸ்தானின் தொடர் தாக்குதலால் மற்றொரு கிராமமான மன்யாரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது கதுவா மாவட்டத்தில் உள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீடு, உணவு கிடங்குகள் இடிந்து விழுந்துள்ளன. அதற்குள் 19 கால்நடை விலங்குகள் சிக்கி காயம் அடைந்தன. மேலும் இரு வாகனங்கள் சேதம் அடைந்தன.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, இந்திய பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய-இஸ்லாமிய இயக்கம்!