ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள எலும்பியல் துறை வளாகத்திற்கு முன்பு பசியால் ஒரு பெண் தவித்துவந்துள்ளார். அப்பெண் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடம் உணவு கேட்டு மன்றாடியுள்ளார்.
ஆனால் ஊழியர்கள் அவருக்கு உணவு தர மறுத்துள்ளனர். இதனால் பசிக் கொடுமைக்கு ஆளான அப்பெண் தன் பசியை தீர்த்துக்கொள்ள அருகிலிருந்த புறாவைப் பிடித்து உயிருடன் சாப்பிட்டுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம், மனிதாபிமானம் இருந்தும் கூட அந்த நோயாளிக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இங்கு மனநல மருத்துவத்திற்கு தனி துறை இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட அப்பெண் பல நாட்களாக உணவு கேட்டு வந்துள்ளார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. மாநிலத்தின் மிகப் பெரிய மருத்துவமனையாக இருந்தபோதிலும் இங்கு விலையில்லா உணவு அளிக்கப்படுவதில்லை. இந்த ஆதரவற்ற நோயாளிகளை பார்த்துக்கொள்ள யாருமில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி மெட்ரோ பயணியிடம் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல்!