ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இக்கூட்டணி அரசின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவிவகிக்கிறார்.
இவர் தன்மீது அவதூறு பரப்பியதாகக் கூறி பாஜக மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் தூபே மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி நஷ்ட ஈடாக 100 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியின் உறுப்பினாரன தூபே, 2013ஆம் ஆண்டு ஹேமந்த் சோரன் ஒரு இளம்பெண்ணை மும்பையில் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றஞ்சாட்டி சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இந்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெங்களூர் நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி கொள்ளை - காவல்துறையினர் விசாரணை!