ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி ஜந்து கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஜார்க்கண்ட் மாநில மேதினி நகர் மற்றும் கும்லா பகுதிகளில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பொதுக்கூட்டம் முடிந்து பிறகு இரண்டாவது கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள ஜம்ஷெத்பூரில் பிரதமர் மோடி சாலை பேரணி நடத்த உள்ளதாகவும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பவார் - தாக்கரே திடீர் நள்ளிரவு சந்திப்பு - நடந்தது என்ன? யாருக்கு எந்தெந்த துறைகள்?