உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் பணியாற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர், கரோனா வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் காவலர்களை பாதுகாப்பதற்காக புதிய வகையிலான மருத்து பாதுகாப்பு உபகரணம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார். இது மழைக்காலங்களிலும் உபயோகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனை தயாரித்த துணை காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து கூறுகையில், " இந்த யோசனை தோன்றியவுடன் முதற்கட்டமாக சில கிட்களை தயாரித்தேன். அதை நான் எல்லை பாதுகாப்பிலிருக்கும் போது உபயோகித்து பார்த்ததில் மிகவும் வசதியாக இருந்தது.
காவலர்கள் ரெயிட் செல்லும்போதும், களப்பணியில் இருக்கும்போதும் காவலர் உடை தெரிவது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டே இந்த கிட்டை தயாரித்தோம். இந்த கிட்டின் விலை 400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் கிட் தயாரிக்கப்பட்டு மாநிலத்தில் பணியிலிருக்கும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன" என்றார்