குவாலியர் (மத்தியப் பிரதேசம்): அரசு அலுவலர்கள் டீ-ஷர்ட், கிழிந்த ஜீன்ஸுகள் அணியக்கூடாது என்று குவாலியர் மண்டல ஆணையர் ஓஜா உத்தரவிட்டுள்ளார்.
ஊழியர்கள் அனைவரும் நேர்த்தியான ஃபார்மல் உடையணிந்து பணிக்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளார். உத்தரவை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்த சுற்றறிக்கை அனைத்து உயர் அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
11 மாதங்களில் ஒரு லட்சம் கார்களை விற்ற கியா மோட்டார்ஸ்!
ஜூலை 20 அன்று முதலமைச்சரின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போது மாண்ட்சூர் மாவட்ட நீதிபதி டீ-ஷர்ட் அணிந்திருந்தது குறித்து தலைமைச் செயலரும், முதலமைச்சரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.