மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றனர்.
18ஆவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்திற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதன்படி, இன்று விவசாய தலைவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.
இந்நிலையில், இதனை விமர்சித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்வீட் செய்துள்ளார். அதில், “அரவிந்த் கெஜ்ரிவால் இது உங்கள் நடிப்பு. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாய பொருள்கள் விற்பனை செய்யும் கூடத்திற்கு கமிட்டி அமைப்பதாக உறுதியளித்தீர்கள். 2020 நவம்பரில் டெல்லியில் விவசாய பண்ணை சட்டத்தை அறிவித்தீர்கள். ஆனால், இன்று உண்ணாவிரத போராட்டம் இருந்து போலியாக நடிக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'கொள்கைகள் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்துவோர்களே பிரிவினைவாதிகள்'