ஐதராபாத்தில் நடைப்பெற்ற தேசிய ஒற்றமை குறித்த பரப்புரை நிகழச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் யாதவ் கலந்துகொண்டு உறையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவில் கொண்டு வந்த மாற்றத்தால் ஐம்மு, லடாக் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்னுமும் சில பிரச்னைகள் உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், லடாக் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேரியுள்ளதால், அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஷ்மீரில் அதிகப்படியான மக்கள் 370ஆவது சட்டப் பிரிவு ரத்துக்கு பாராட்டை தெரிவித்துள்ளதாகவும், பாதுகாப்புப் படையினரால் கடந்த இரண்டு மாதத்தில் மாநிலத்தில் ஒரு விபத்து கூட ஏற்படவில்லை என்றும் மாதவ் கூறினார்.