ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை பட்காம் பகுதியிலுள்ள சுஷ்தூ கிராமத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
இதனிடையே பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் திறம்பட செயல்பட்டனர்.
இந்நிலையில், நீண்ட நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று கொண்டிருப்பதால் பட்காம் பகுதி முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.