இதுகுறித்து ராணுவ அலுவலர்கள் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியனிலுள்ள ரிஷிபோராவில் வசித்துவரும் பிராந்திய ராணுவ வீரர் ஷாகிர் மன்சூர் வாகே. நேற்று இரவு தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் ரம்பாமா பகுதியில் அவரது கார் எரிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தெரியவந்தது. இதனால், அவர் சந்தேகத்திற்குரிய குழுவினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இதற்கிடையில், மன்சூர் வாகேவை விரைவில் விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரை விடுவித்தால் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்துவேன் என அவரது தந்தை கூறியுள்ளார்.
இதற்கிடையில், கடத்தப்பட்ட வாகேவைக் கண்டுபிடிப்பதற்காக குல்காமின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.