ETV Bharat / bharat

ஜாமியா துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 14 நாள்கள் காவல்!

டெல்லி: ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jamia shooter sent to 14-day protective custody

author img

By

Published : Jan 31, 2020, 7:34 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கூட்டத்தை நோக்கி சுட்டார். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் கைதான கோபாலை டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தியது. அதில், கைது செய்யப்பட்ட கோபாலை 14 நாள்கள் பாதுகாப்பு காவலில் வைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் வயதை உறுதிப்படுத்த தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க...நிர்பயா குற்றவாளி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.