கடந்த 15ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் நகரில் நடந்த நிகழ்வு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை கழுதைத் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகமடைந்த உயர் சமூகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கும் சம்பவம்தான் அது.
கழுதைகளை அந்த மூன்று நபர்களும் திருட திட்டமிட்டபோது அதைக் கவனித்த கிராம மக்கள், அவர்கள் திருட்டில் ஈடுபடும் முன்னரே கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்நபர்கள் தாக்கப்பட்டதையடுத்து அந்தக் காணொலி வைரலானது.
இதன் பின்னரே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. பட்டியலின நபர்களைத் தாக்கிய கும்பலை கைதுசெய்யாமல் தாக்கப்பட்ட நபர்களைக் காவல் துறை கைதுசெய்துள்ளது. இதையடுத்த அடுத்த நாள் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எஸ்..சி, எஸ்.டி. பிரிவு தலைவர் முகேஷ் சோப்ரா இச்சம்பவத்தின் பின்புலத்தை அறிய கிராமத்திற்கு வந்த பின்பு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஒருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: டிக் டாக்கில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய இளம்பெண் கைது..!